ஆகாஷ்வாணி தூர்தர்ஷன் நிலையங்கள் நவீனமயத்திற்கு ரூ2,539.61 கோடி ஒப்புதல்:எல்.முருகன்!
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மக்களவையில் பேசிய பொழுது அனைத்து மாநிலங்களிலும் ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷன் நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஒலிபரப்பு உட்கட்டமைப்பு மேம்பாடு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன
இத்திட்டத்திற்காக 2021–26 ஆம் நிதியாண்டில் ரூ2,539.61 கோடி செலவிடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது பீகாரில் ஒலிபரப்பு சேவை உட்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது ஆகாஷ்வாணி நிலையங்களை ரூ64.56 கோடி மதிப்பிலும் தூர்தர்ஷன் நிலையங்களை ரூ4.31 கோடி மதிப்பிலும் நவீனப்படுத்துவது இதில் அடங்கும்