ததமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பழக்கவழக்கங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்று இளைஞர்கள் தங்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதற்கு இத்தகைய போதைப் பொருள் மருந்துகள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு இடங்களில் மிகவும் சிரமமாக போதைப் பொருட்கள் கிடைப்பதாக செய்திகள் தினமும் வெளியாகிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று மக்கள் பரபரப்பாக இயங்கக்கூடிய சென்னை ரயில் நிலையத்தில் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டிகளில் இருந்து 28 கிலோ கஞ்சா பறிமுதல்.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் ரயில்வே அதிகாரிகளிடம் இருந்து காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. காவல்துறை இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.