அருணாச்சலப் பிரதேசத்தில் 5100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிய பிரதமர்!! இரட்டிப்பு சந்தோஷத்தில் மக்கள்!!
அருணாச்சல பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.5100 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் இரு நீர் மின் திட்டங்களுக்கும், தவாங்கில் 9,820 அடி உயரத்தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்கவும் பிரதமர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
இட்டா நகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசம் அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த பூமி என்றும், வடகிழக்கு மாநிலத்தை மேம்படுத்த முடியாத நிலையில் அடிக்கடி அமைச்சர்களை அனுப்பி வைத்ததாகவும் 70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்கு தான் வந்ததாக கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் பழக்கமே கடினமான வளர்ச்சி பாதைகளை மேற்கொள்ளாமல் இருப்பது தான் இதனால்தான் காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி மறு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது பண்டிகை காலங்களில் மக்கள் இரட்டை வரவு பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்று தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் அருணாச்சல பிரதேசம் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் இது காங்கிரஸ் ஆட்சியில் பெற்றதை விட 16 மடங்கு அதிகம் என்று கூறியுள்ளார்.