பெண்களால் நடத்தப்படும் 76,000 புத்தொழில்கள்: உறுதுணையாக இருக்கும் மோடி அரசு!

Update: 2025-07-22 16:15 GMT

இந்தியாவில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் உள்ளன என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறை, தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து பாட்னாவில் ஏற்பாடு செய்திருந்த “வளர்ச்சியடைந்த பீகார்: பெண்கள் பங்கேற்பின் மூலம் ஒரு வளர்ந்த பீகாரை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.


2047-ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதை, அதிகாரம் பெற்ற பெண்களாலும் இளைஞர்களாலும் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது நிர்வாகக் கட்டமைப்பை ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய நான்கு தூண்களை மையமாகச் சுற்றி அமைத்துள்ளது என்றும், பெண்கள் தொடர்ந்து முன்னணி இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெண்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தை மறுவடிவமைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

பெண்கள் முதல் முறையாக சைனிக் பள்ளிகளிலும் மதிப்புமிக்க தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் அனுமதிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். அறிவியல், தொழில்நுட்ப துறையில் அதிகாரமளித்தல், பொருளாதார - சமூக அதிகாரமளித்தல் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெண்களுக்காக 48 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். முத்ரா திட்ட பயனாளிகளில் 60 சதவீதத்து க்கும் மேற்பட்டோர் பெண் தொழில்முனைவோர் என அவர் குறிப்பிட்டார்.

Similar News