எட்டு மாத காலமாக 1 லட்சம் கோடிக்கும் மேலாக இருந்த GST வசூல் ஜூன் மாதத்தில் ஒரு லட்சம் கோடிக்குக் கீழ் குறைந்துள்ளது.
ஜூன் மாதம் மொத்தம் GST வசூல் ₹92,849 கோடியாக மத்திய அரசு கணக்கிட்டது. ஜூன் மாதம் GST பாதிக்கப்பட்டுள்ளது, காரணம் இது மே மாதத்துடன் தொடர்புடையது என்பதால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வணிகங்களைப் பாதித்தது. மே மாதத்தில் மொத்த இ-வே பில் 3.99 கோடியாக உள்ளது இது ஏப்ரலில் 5.88 கோடியாக இருந்தது.
இரண்டாவது கொரோனா அலை தடுப்பு மற்றும் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது போன்ற காரணத்தால் வணிக சூழல் மீண்டும் முன்னேறும் என்று எதிர்ப்பாக்கப்படுவதாகவும் மற்றும் மீண்டும் GST வசூல் ₹1 லட்சம் கோடிக்கு மேலான இலக்கை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"முந்தைய மாதத்துடன் ஜூன் 2021 GST வசூலை ஒப்பிடும் போது, மாநிலங்களில் பூட்டுதல் விதிக்கப்பட்டதன் மூலம் இ-பில்கள் சற்று வீழ்ச்சி அடைந்தது. 10 மாத அளவிற்குக் குறைந்த வசூலைக் கண்டபோதிலும், ஜூன் 2021 GST வசூல் நேர்மறையான ஆச்சரியத்தைக் கண்டுள்ளது," என்று ICRA தலைமை பொருளாளர் அதிதி நாயர் தெரிவித்தார்.
நிதியாண்டு 22 காலாண்டில் GST வசூல் கடந்த ஆண்டு காலப்பகுதியை ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும், இது மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வந்துள்ளது. வணிகங்கள் மீண்டும் மீண்டுவருவது அரசாங்கத்தின் வருவாய் நிலைமையை மேம்படுத்தும், இது கொரோனாவால் வீழ்த்தியடைந்ததில் வெளியேற வழிவகுக்கிறது.
"கடந்த நிதியாண்டு 21 யை ஒப்பிடும்போது, நிதியாண்டு 22 காலாண்டு முதல் பகுதியில் GST வசூல் இரண்டுமடங்கு அதிகமாகவே உள்ளது. முந்தைய ஆண்டு கொரோன தொற்றின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டது ஆனால் இரண்டாம் அலையின் எச்சரிக்கையில் மாநிலங்களில் உள்ளூர் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் நிதியாண்டு 22 காலாண்டில் GST வசூல் கொரோனா தொற்றின் முந்திய ஆண்டன நிதியாண்டு 20 யை அளவை விட அதிகமாக உள்ளது," என்று நாயர் குறிப்பிட்டார்.
Source: Economic Times