ராணுவ முகாமில் உள்ள போர் முழக்கத்தை நீக்க வேண்டும் - NGO கோரிக்கையால் பரபரப்பு!
கோவை மாவட்டம் பாலக்காடு சாலையில் அமைந்துள்ள இந்திய ராணுவத்தின் முகாமில் நுழைவு வாயிலின் இருபுறமும் "வெற்றிவேல் வீரவேல்" என்று பொறிக்கப்பட்டுள்ள வாசகத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் NGOக்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஷேக் அகமது என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ படை பிரிவில் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் ஒவ்வொரு போர் முழக்கம் உள்ளது. இது இந்திய ராணுவம் தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து வருகிறது. உதாரணமாக ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் பிரிவுக்கு- "பாரத் மாதா கி ஜெய்", "துர்கா மாதா கி ஜெய்", கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவுக்கு- "ஜெய் மா காளி", ஜாட் படைப் பிரிவுக்கு "ஜாட் பல்வான் ஜெய் பகவான்", பீகார் படைப்பிரிவுக்கு "ஜெய் பஜ்ரங்கபலி" என்ற போர் முழக்கங்களை பயன்படுத்துவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இதே போல் தற்போது கோயமுத்தூர் மதுக்கரையில் அமைந்துள்ள இந்திய ராணுவத்தில் முகாமில் நுழைவு வாயிலின் இருபுறமும் "வெற்றிவேல் வீரவேல்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலும் இந்து அல்லாதவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய மனித உரிமைகள் அமைப்பு என்ற தனியார் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஷேக் அகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த போர் முழக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். காலம் காலமாக ராணுவத்தில் பயன்படுத்தி வரும் போர் முழக்கத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுவதற்கான காரணம் என்ன என்று இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.