பொதிகை தொலைக்காட்சியில் காலை 10 முதல் 11 மணி வரை பத்தாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு!

பொதிகை தொலைக்காட்சியில் காலை 10 முதல் 11 மணி வரை பத்தாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு!

Update: 2020-04-15 07:52 GMT

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 27ம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் தற்போது ஊரடங்கு மே 3 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு மிக முக்கியம் என்பதால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட மாட்டாது, நிச்சயம் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து ஒவ்வொரு தேர்வுக்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்காமல் 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாணவிகள் தற்போதுள்ள விடுமுறையை பயன்படுத்தி தங்களை தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ள பொதிகை தொலைக்காட்சியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 'காண்போம் கற்போம்' என்ற நிகழ்ச்சி மூலம் அவர்களுக்கான பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

Similar News