100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி..திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த மத்திய அரசு..!

Update: 2024-03-28 07:54 GMT

பல நேரங்களில் மத்திய அரசு தன் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் மக்களுக்கான திட்டங்களில் பல சலுகைகளை இன்ப அதிர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் பணியாளர்களுக்கு அவர்களின் அகவிலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து பெட்ரோலின் விலையையும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது மேலும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு சிலிண்டர் விலையையும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 

அதேபோன்று தற்பொழுதும் ஒரு இன்ப அதிர்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தின் பணியாளர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருபவர்கள் 294 ரூபாயை தங்கள் ஊதியமாக நாள் ஒன்றுக்கு பெற்று வந்தனர் இதில் மத்திய அரசு 100 ரூபாய் உயர்த்தி 319 ஆக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களின் ஊதியத்தை அதிகரித்துள்ளது. 

தற்போது 2024 லோக்சபா தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷனின் அனுமதியையும் பெற்று இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

Source : Dinamalar 

Similar News