வானில் இருந்து குதித்து சாகசம் செய்த 104 வயது பாட்டி- உலகின் வயதான ஸ்கை டைவர் என சாதனை!

இளம் வயதினரே பல வேலைகள் செய்ய தயங்கி பின்வாங்கும் நிலையில் தனது சாகசத்தை 104 வயதில் நிகழ்த்தி இருக்கிறார் ஒரு பாட்டி.

Update: 2023-10-04 18:00 GMT

நரை தோன்றும்போதே  பலருக்கு நடுக்கம் வந்துவிடும். ஆனால் நரைத்தாலும்,  நரம்புகள் தளர்ந்தாலும், துணிந்தால் வெற்றி தான் என நிரூபித்துள்ளார் 104 வயதான சிகாகோ மூதாட்டி டோரத்தி ஹாப்னேர். தள்ளாட்டம் தரும் இந்த வயதில் தளராமல் வானில் இருந்து குதித்து உலகின் வயதான ஸ்கை டிரைவர் என சாதனை படைத்துள்ளார் அவர். பாட்டி வானில் இருந்து பாய்ந்து வரும் வீடியோ பாராட்டுகளை குவித்து வைரலாகி வருகிறது.


SOURCE :DAILY THANTHI

Similar News