11 மாதத்தில் முதன்முறையாக உற்பத்தித் துறையில் சுருக்கம்!

Update: 2021-07-02 09:32 GMT

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தேவை மற்றும் உற்பத்தியில் ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட ஒருவருடத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் தொழிற்சாலை செயல்பாடுகளிலும் சரிவைச் சந்தித்தது. இதனால் நிறுவனங்களில் அதிக வேலையைக் குறைக்கத் தொடங்கியது தனியார் நிறுவன கணக்கெடுப்பில் வியாழக்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது.


இருப்பினும் தினசரி பாதிப்பு வழக்குகள் குறையத்தொடங்கியதால் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தி வந்த நிலையில், தற்போதைய டெல்டா பிளஸ் மாறுபாட்டால் மீண்டும் பொருளாதார பாதிப்பில் கவலையை எழுப்பியுள்ளது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கையால், தேவையில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படத் தொடங்கின, மேலும் தொழிற்சாலை ஆர்டர்கள், உற்பத்தியில் மற்றும் கொள்முதல் அளவுகளில் கூட தாக்கத்தை ஏற்படுத்தின. மிக முக்கியமாக வேலை இழப்புகளும் தொடர்ந்தன.

2021 - 2022 தொடக்கக் காலாண்டில் PMI சராசரியாக 51.5 ஆக இருந்தன. புதிய தேவைகள் 2020 ஆகஸ்டில் எழத் தொடங்கிய போதிலும் ஜூன் மாதத்தில் முடிவுக்கு வந்தது, இது நிறுவனத் தேவைகளின் குறைவு தொற்றுநோயுடன் இணங்கும்.

தொற்றுநோயால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பட்டால் இந்தியத் தயாரிப்புகளின் உலகளாவிய தேவையையும் தடுத்தது. மேலும் 10 மாதத்தில் முதன் முறையாக புதிய ஏற்றுமதியின் ஆர்டர்களும் சரிந்தன.


இதனால் இந்திய உற்பத்தியாளர்களின் உற்பத்தியின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. இது 2020 பாதியின் சரிவை ஒப்பிடும் போது மிதமாக இருந்தாலும், 10 மாத வளர்ச்சியின் பாதையைத் தடுத்தது.

Source: Business Today

Similar News