நிறுத்தப்பட பனிலிங்க யாத்திரை - திடீர் இயற்கை சீற்றம், என்ன நடந்தது அமர்நாத்தில்?

அமர்நாத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மாயமாகியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-07-09 05:44 GMT

அமர்நாத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மாயமாகியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அமர்நாத் யாத்திரை என்பது இமயமலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் யாத்திரையாகும், அமர்நாத் பனி குகை நோக்கி 43 நாட்கள் பயணம் செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடங்கிய ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைகிறது அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்துக்கும் மேலான பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு துவங்கியதும் பக்தர்கள் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க படையெடுத்தனர் இந்த நிலையில் கனமழை கொட்டுவது போன்ற மேக வெடிப்பு ஏற்பட்டு பேரிழப்பு ஏற்பட்டு பலர் அங்கு சிக்கி கொண்டனர்.

அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் கனமழை கொட்டியது.

இந்த மலையின் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன மேக வெடிப்பு காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போன விட்டதாகவும் அவர்கள் நிலை என்ன ஆனதும் தெரியவில்லை என அஞ்சப்படுகிறது.



தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு பகுதிகள் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Source - News 18 Tamil Nadu

Similar News