16 வயதான பிரபல டிக்டோக் நட்சத்திரம் சியா கக்கர் தூக்கிட்டு தற்கொலை - நெட்டிசன்கள் அதிர்ச்சி.! #SiyaKakkar #TikTok #Suicide

16 வயதான பிரபல டிக்டோக் நட்சத்திரம் சியா கக்கர் தூக்கிட்டு தற்கொலை - நெட்டிசன்கள் அதிர்ச்சி.! #SiyaKakkar #TikTok #Suicide

Update: 2020-06-26 01:46 GMT

பிரபல டிக்டோக் நட்சத்திரம், சியா கக்கர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 16. இளம் வயதான மற்றும் பிரபலமான டிக்டோக் நட்சத்திரமான அவர் புதன்கிழமை இரவு 9 மணியளவில் டெல்லியின் கீதா காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சமூக ஊடக தளங்களில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர், அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. சியா கக்கரின் குடும்பத்தினர் இந்த விரும்பத்தகாத துயர சம்பவத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளனர், இந்த நேரத்தில் யாரிடமும் பேச மறுக்கிறார்கள்.

ஊரடங்கினால் சியா சில மாதங்கள் வீட்டில் இருந்ததாகவும், கடந்த 4-5 நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஜூன் 14 அன்று அவரது பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த நிலையில், இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சியா கக்கரின் திடீர் மறைவுக்கு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இரங்கல் செய்திகளுடன் ட்விட்டர் வெள்ளமானது.  




அவரது மேலாளர் அர்ஜுன் சாரின், சில திட்டங்களைப் பற்றி ஒரு நாள் முன்பு அவரிடம் பேசியதாகவும், அப்போது அவர் நன்றாக இருந்தார் என்றும் கூறினார்.

Similar News