160 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் நமோ பாரத் ரயில்!!

Update: 2025-09-15 07:18 GMT

டெல்லியில் இருந்து மீரட்டுக்கு தற்பொழுது புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டதாகவும், இந்தப் பாதையானது 84 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 30,274 கோடி செலவில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரைவு ரயில் பாதையை 55 கிலோ மீட்டர் வரைக்கும் நமோ பாரத் என்கின்ற ரயில் 160 km வேகத்தில் இயக்கப்பட்டது எனவும் செய்தி வெளியாகியுள்ளது. 

30 நமோ ரயில்கள் எல்லாவற்றிலும் ஆறு பெட்டிகளை உடைய ரயில் கிழக்கு டெல்லியின் நியூ அசோக் என்ற இடத்திலிருந்து உத்திரபிரதேசத்தில் உள்ள மீரட் என்ற இடம் வரைக்கும் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. 

புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த வழித்தடத்தில் 11 ரயில் நிலையங்களுக்கு சில வினாடிகளில் செல்லும் நமோ ரயில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இதை பார்க்கும் பொழுது கடந்த 2016 ஆம் ஆண்டில் கதிமேன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா மற்றும் நிசாமுதீன் பாதையில் இயங்கும் வேகத்தை போல அமைந்திருக்கிறது. 

ஆனால் தற்பொழுது இந்த நமோ பாரத் ரயில் மட்டுமே 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த ரயிலை ஹைதராபாத்தில் வடிவமைத்து குஜராத்தில் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதே வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலையும் ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோமீட்டர் என்று வைத்து இயக்கப்பட்டபோது அது 130 கிலோ மீட்டர் மட்டுமே செல்வதற்கு குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News