கடந்த தசாப்தத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாக இந்தியா, 171 மில்லியன் மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டுள்ளது. உலக வங்கி தனது 2025 வசந்த கால வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையில் வறுமைக்கு எதிரான இந்தியாவின் தீர்க்கமான போராட்டத்தை ஒப்புக்கொள்கிறது. இந்த அறிக்கையின்படி, தீவிர வறுமைக்கு சர்வதேச அளவுகோலான ஒரு நாளைக்கு 2.15 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக வாழும் மக்களின் விகிதம், 2011-12-ல் இருந்த 16.2 சதவீதம் என்பதிலிருந்து 2022-23-ல் வெறும் 2.3 சதவீதம் எனக் கடுமையாகக் குறைந்துள்ளது.
இந்த சாதனை, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் கவனம் செலுத்திய, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நலத்திட்டங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அதிகரித்த அணுகல் மூலம், வறுமை அளவைக் குறைப்பதில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. உலக வங்கியின் 2025 வசந்த கால வறுமை மற்றும் சமத்துவ அறிக்கை, இந்த முயற்சிகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை எவ்வாறு கணிசமாக மாற்றியுள்ளன, நாடு முழுவதும் வறுமை இடைவெளியைக் குறைத்து உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. உலக வங்கியின் இந்தியாவிற்கான வறுமை மற்றும் சமத்துவ சுருக்கம், தீவிர வறுமையில் கூர்மையான குறைப்பு பரந்த அடிப்படையிலானது என்றும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கியது என்றும் கண்டறிந்துள்ளது.
கிராமப்புறங்களில், தீவிர வறுமை 2011-12-ல் 18.4 சதவீதம் என்பதிலிருந்து 2022-23-ல் 2.8 சதவீதமாகக் குறைந்தது. நகர்ப்புறங்களில், அதே காலகட்டத்தில் தீவிர வறுமை 10.7 சதவீதம் என்பதிலிருந்து 1.1 சதவீதமாகக் குறைந்தது.கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமைக்கு இடையிலான இடைவெளி 7.7 சதவீதம் என்பதிலிருந்து 1.7 சதவீதமாக சுருங்கியது. 2011-12 மற்றும் 2022-23 க்கு இடையில் சரிவு விகிதம் ஆண்டுக்கு 16 சதவீதமாகும்.