காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரை பாதுகாப்பு துறையின் இருண்ட காலம் - ராணுவ கருவிகள் கூட வாங்க முடியாத அளவுக்கு ஊழல் - ஜே.பி. நட்டா கடும் குற்றச்சாட்டு.!

காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரை பாதுகாப்பு துறையின் இருண்ட காலம் - ராணுவ கருவிகள் கூட வாங்க முடியாத அளவுக்கு ஊழல் - ஜே.பி. நட்டா கடும் குற்றச்சாட்டு.!

Update: 2020-07-27 07:58 GMT

காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு துறையில் ஊழல் நடந்ததால் ராணுவத்துக்குத் தேவையான கருவிகள் வாங்க முடியாத சூழ்நிலை உண்டானதா பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா குற்றச்சாட்டு.

நேற்று கார்கில் போரின் 21ஆம் ஆண்டு வெற்றி நாளில் பேசியஜே.பி நட்டா கூறியது: இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு ராணுவ வீரர்கள் நாட்டிற்காக செய்யும் தியாகத்தினை எப்பொழுதும் மறந்து விடக்கூடாது. மலைப் பகுதிகளில் நடைபெற்ற கார்கில் போரில், கடுமையான சமயத்திலும் மன வலிமையுடன் போராடிய இந்திய வீரர்கள் பாகிஸ்தானை வென்றது. அந்த ராணுவ வீரர்களுக்கு நாடே கடமைப்பட்டுள்ளது.

2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜ.மு.கூட்டணி ஆட்சியில் பாதுகாப்பு துறையில் ஊழல் நடந்ததால் ராணுவத்துக்கு தேவையான கருவிகளை வாங்க முடியாத சூழ்நிலை உண்டாக்கியது. பின்னர் பிரதமர் மோடி அரசு வந்தவுடன் 36 ரஃபேல் விமானங்கள், 28 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு துறையில் பிரதமர் மோடி மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறார்.

தபோது சீனாவுடன் மோதல் பிரச்சனையில், லடாக் சென்ற பிரதமர் மோடி இந்தியா ராணுவ வீரர்களுக்கு பாராட்டை தெரிவித்தார்.

இவ்வாறு ஜே.பி நட்டா கூறினார்.  

Similar News