ஒரே நாளில் இந்தியாவில் 4,42,031 கொரானா வைரஸ் மாதிரிகள் பரிசோதனை செய்து புதிய சாதனை.!

ஒரே நாளில் இந்தியாவில் 4,42,031 கொரானா வைரஸ் மாதிரிகள் பரிசோதனை செய்து புதிய சாதனை.!

Update: 2020-07-27 05:31 GMT

தேசிய சோதனை திறனை கணக்கிடும்போது, சனிக்கிழமை (ஜூலை 25) ஒரேநாளில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மாதிரி சோதனைகள் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில்,   4,42,031 ஆக உயர்ந்துள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. அரசு ஆய்வகங்கள் நாள்தோரும் அதிகபட்சமாக 3,63,153 கொரோனா சோதனைகள், தனியார் ஆய்வகங்களின் ஒரு நாள் ஒட்டு மொத்த சோதனை 79,878 என்று அளவிடப்பட்டுள்ளன .

டாக்டர் ஹர்ஷ வர்தன் தலைமையிலான மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (MoHFW) கூறுவது என்னவென்றால், தீவிரமாக, தேடிக் கண்டறிந்து சோதனை மேற்கொள்ளும் போது தினசரி எண்ணிக்கையில் அதிகமான பாசிடிவ் கேஸ் ஏற்பட்டாலும் இறுதியில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கையில் சரிவுக்கு வழிவகுக்கும், என்று கூறி உள்ளனர் .

COVID-19 க்கான சோதனைகளை நடத்தும் திறன் கொண்ட ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்ததே பரிசோதனை மாதிரிகள் உயரக் காரணம் என்று MoHFW கூறியுள்ளது, இது 2020 ஜனவரியில் ஒன்றிலிருந்து 1,301 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, ​​மாதிரிசோதனைகள் செய்யும் அரசு ஆய்வகங்கள் 902 உள்ளன, தனியார் ஆய்வகங்கள் மொத்தம் 399 உள்ளது.

source: https://swarajyamag.com/insta/india-tests-record-442-lakh-covid-19-samples-in-a-single-day

Similar News