வாக்காளர் பட்டியலுடன் இணைக்க தமிழகத்தில் 68.75 சதவீத ஆதார் விவரம் பெறப்பட்டன - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

வாக்காளர் பட்டியலுடன் இணைக்க தமிழகத்தில் 68.75 சதவீத ஆதார் விவரங்கள் பெறப்பட்டன என்று தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-05 01:30 GMT

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் உடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி கடந்து செல்ல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி உடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாக இருந்தன. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகாஷ் சாகு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல் உடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அந்த விவரங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று வருகிறோம். அந்த வகையில் கடந்த மார்ச் 31ம் தேதி மொத்தமுள்ள 6.20 கோடி வாக்காளர்களில் 4.21 கோடி வாக்காளர்களிடம் இருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இது 68.75 சதவீதமாகும்.

அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 99 சதவீதமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 93.91%, நாகை மாவட்டத்தில் 87.49 சதவீதமும், வாக்காளர்களிடமிருந்து ஆதாரம் விபரங்கள் பெறப்பட்டன. குறைந்தபட்சமாக சென்னையில் 32.26 சதவீதம், கோவை மாவட்டத்தில் 48.34% செங்கல்பட்டு மாவட்டத்தில் 53.50 சதவீத வாக்காளர்களிடமிருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



 


Similar News