80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கும் மோடி!
பிரதமர் மோடி என்பது கோடி பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கி வருவதாக மக்களவையில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.;

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி பிரணாதி ஷிண்டே பேசுகையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு தானியம் வழங்கப்பட உள்ளது. உள்ளது. உள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. எங்கள் தலைவர் சோனியாகாந்தியின் மூளையில் உதித்த திட்டம் என்று கூறினார். அதற்கு மத்திய உணவுத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி பதிலளித்தார். அவர் பேசியதாவது:-
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது அதற்கு முந்தைய ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. அந்த திட்டத்திற்கான விதிமுறைகள் கூட வகுக்கப்படவில்லை. 2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகுதான் பிரதமர் மோடி ஏழைகளுக்கு உணவு தானியம் கிடைப்பது உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தார். ஏனெனில் அவர் ஏழைகளின் வேதனை அறிந்தவர். தற்போது பிரதமர் மோடி என்பது கோடி பேருக்கு இலவச உணவுகளை வழங்கி வருகிறார். மோடி அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் மக்களின் வாழ்க்கை எளிதாகிவிட்டது. ஒருவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இலவச ரேஷன் பொருட்களை வாங்கலாம் இவ்வாறு அவர் பேசினார்.