விரைவில் மின்னணு ஏலம் நடத்தப்பட இருக்கும் 808 வானொலி நிலையங்கள்

விரைவில் 808 வானொலி நிலையங்களுக்கு மின்னணு ஏலம் நடத்த இருப்பதாக மத்தியமந்திரி அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-24 14:45 GMT

டெல்லியில் பிராந்திய சமுதாய வானொலி மாநாடு நடந்தது. அதில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-


நாட்டில் தற்போது 26 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களில் உள்ள 113 நகரங்களில் மொத்தம் 388 கண்களை வானொலி நிலையங்கள் உள்ளன.நாடு முழுவதும் வானொலி சேவையை விரிவு படுத்துவதற்காக விரைவில் 284 நகரங்களில் 808 பண்பலை வானொலி நிலையங்கள் நடத்த மின்னணு ஏலம் விடப்படும். மேலும் வானொலி நிலையங்கள் நடத்த குறிப்பாக சமுதாய வானொலி நிலையங்கள் நடத்துவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு எளிமை படுத்தி இருக்கிறது.அதற்கான நிபந்தனைகள் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News