இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், 99 சதவீதம் ஊரகப் பகுதிகளுக்கு தெரு குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது!

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், 99 சதவீதம் ஊரகப் பகுதிகளுக்கு தெரு குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது!

Update: 2020-07-11 08:51 GMT

தமிழகத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு பல்வேறு பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள், தனி குடிநீர்த் திட்டங்கள், குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட குடிநீர் வழங்கல் பணிகளுக்கென ரூ. 39,849 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2.22 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் ஊரக தனி மின்விசை குடிநீர்த் திட்டங்கள், 15 பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள், 70 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் 79 நகர குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், 99 சதவீதம் ஊரகப் பகுதிகளுக்கு தெரு குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு, வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு, ஊரகப் பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்து நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்ட தரத்திலும் குடிநீரினை, 2024ம் ஆண்டுக்குள் வழங்கும் பொருட்டு, ஜல் ஜீவன் மிஷன் எனும் திட்டத்தினை 15.08.2019 அன்று நடைபெற்ற 73வது சுதந்திர தின விழாவில் பிரதமரால் அறிவிக்கப்பட்டு அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர இதற்கான திட்ட வழிகாட்டுதல் கையேடும் வெளியிட்டுள்ளது.

கிராம வாரியாக மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் தற்பொழுது குடிநீர் இணைப்பு உள்ள வீடுகள் மற்றும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட வேண்டிய வீடுகள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான வலைதளத்தில் பின்வருமாறு அவ்விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 01.04.2020 நாளின்படி உள்ள விபரங்கள் பின் வருமாறு.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த கிராம ஊராட்சிகள் : 12,525

தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஊரக குடியிருப்புகள் : 79,395

ஊரக குடியிருப்புகளில் உள்ள வீடுகள் : 1,26,89,045

ஊரக குடியிருப்புகளில் உள்ள குடிநீர் வீட்டிணைப்புகள் : 21,80,013

மீதமுள்ள குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டியுள்ள வீடுகள் :1,05,09,032

மேற்கண்ட மீதமுள்ள குடிநீர் இணைப்புகளை வழங்க (1,05,09,032) 2020-21 முதல் 2023-2024 ஆகிய 4 ஆண்டுகளில் பகுதிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 100 விழுக்காடு இலக்கினை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் மத்திய மாநில அரசுகளின் மொத்த ஒதுக்கீடான 2374.74 கோடி ரூபாயினை மார்ச்-2021க்குள் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனைகளுக்குட்பட்டு, இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

Similar News