'நுபுர் ஷர்மா தலைக்கு வீடு தருகிறேன்' என அறிவித்த தர்கா மதகுரு - கொத்தாக நள்ளிரவில் தூக்கிய போலீஸ் படை

'நுபுர் ஷர்மா தலையை கொண்டு வந்தால் எனது வீட்டை தருவேன்' என தர்காவின் மதகுரு அஜ்மீர் கூறியது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-07-06 10:53 GMT

'நுபுர் ஷர்மா தலையை கொண்டு வந்தால் எனது வீட்டை தருவேன்' என தர்காவின் மதகுரு அஜ்மீர் கூறியது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்த தெரிவித்த சர்ச்சை கருத்து உலக அளவில் விவாத பொருள் ஆன நிலையில் இஸ்லாமிய தரப்பிலிருந்து மிரட்டல்கள் அதிகரித்து வந்தன.

இந்நிலையில் அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் ஹிஸ்டரி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், 'பா.ஜ.க பிரமுகர் நுபுர் ஷர்மாவின் தலையை கொண்டு வந்தால் அவர்களுக்கு எனது வீட்டை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

நபிகள் நாயகத்தை அவமதிப்பிற்காக அவரை பொது இடத்தில் சுற்றிக் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் பதில் அளித்து விட்டீர்கள் நான் இப்போது ராஜஸ்தான் மாநிலம் அஸ்மீரில் இருந்து இதனை தெரிவிக்கிறேன்' என கூறினார்.


இந்த மூன்று நிமிடம் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நள்ளிரவில் அவரை கைது செய்தனர், இது குறித்து போலீஸ் அதிகாரி பிரகாஷ் கூறுகையில் சல்மான் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது சல்மான் பேசும்போது மது போதையில் இருந்ததாக தெரிகிறது இதுபோன்ற வீடியோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Source - Junior Vikatan

Similar News