மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவால் பெண்களிடம் ஏற்பட்ட முன்னேற்றம் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் 28 லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-27 07:30 GMT

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி டெல்லியில் நடந்த இந்திய பொது விவகாரம் என்ற நிகழ்ச்சியின் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காரணமாக 28 லட்சம் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு திறமையானவர்களாக மாறுவார்கள். இதுதான் பெண்களின் வலிமை. இவ்வாறு அவர் பேசினார்.

SOURCE :DAILY THANTHI

Similar News