தீபாவளி முடிந்து திருச்செந்தூரில் துவங்கும் கந்த சஷ்டி பெருவிழா - ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் கோவிலின் கந்தசஷ்டி விழா வரும் 25ஆம் தேதி துவங்குகிறது.

Update: 2022-10-14 06:18 GMT

திருச்செந்தூர் கோவிலின் கந்தசஷ்டி விழா வரும் 25ஆம் தேதி துவங்குகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டி விழா அவர் 28ஆம் தேதி முதல் துவங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது மேலும் அதனை தொடர்ந்து ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெறும். விழாவின் ஆறாம் திருவிழாவான 30 ஆம் தேதி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கந்தசஷ்டி வைபவம் நடைபெறும் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் எனவும் அறநிலையத்துறை கணித்துள்ளது.

Similar News