அடுத்த எம்.ஜி.ஆர் என்று மூதாட்டியால் புகழப்பட்ட அண்ணாமலை - தன்னடக்கத்தோடு அண்ணாமலை கூறிய பதில்

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணத்தின் போது ஒரு மூதாட்டி அவரை எம்.ஜி.ஆர் என்று மனதார புகுந்து பாராட்டி இருக்கிறார் தெரியுமா எத்தனை மணி நேரமா பாக்குற எவ்ளோ நேரம் தெரியுமா பார்க்கிற ரெண்டு மணி நேரமா பார்த்துட்டு இருக்க

Update: 2023-08-06 15:00 GMT

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நடை பயணம் மேற்கொண்டார். அப்பகுதியில் முள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி அம்மாள் அண்ணாமலையை பார்க்க வேண்டும் என்று தனது மகன் முத்துப்பாண்டி இடம் தெரிவித்துள்ளார். வீட்டு முன்பு அண்ணாமலை நடைபயணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அண்ணாமலை வந்தபோது இங்குள்ள எனது உறவினர் வீட்டுக்கு வரவேண்டும் என்று பார்வதி அம்மாள் அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று அவரது உறவினர் வீட்டுக்கு அண்ணாமலை சென்றார் .


அங்கு அண்ணாமலையிடம் அவர் "உன்னைய பார்த்துவிட்டேன் எம்.ஜி.ஆரை தொடணும்னு நினைச்சேன் நடக்கவில்லை. அடுத்த எம்.ஜி.ஆரை தொட்டுட்டேன். உன்னைய புரட்சித்தலைவர்னு சொல்லணும்" என்று கூறினார். உடனே அண்ணாமலை "எம்.ஜி ஆர். கால் நகத்துக்கு நான் சமமில்லை. நான் ஒரு விவசாயி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று கூறினார். இந்த நிகழ்வு ருசிகரத்தை ஏற்படுத்தியது. இது சம்பந்தமான வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.


SOURCE:DAILY THANTHI

Similar News