ஜூன் 5'ம் தேதி வெளியாகும் தி.மு.க ஊழல் பட்டியல் - அண்ணாமலை வீசிய அஸ்திரம்

தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஜூன் 5'ம் தேதி வெளியாகும் என அண்ணாமலை நான் குறித்துள்ளார்.

Update: 2022-06-03 06:15 GMT

தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஜூன் 5'ம் தேதி வெளியாகும் என அண்ணாமலை நான் குறித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய அவர் தி.மு.க அரசின் ஊழலை பற்றி குறிப்பிடும்பொழுது கூறியதாவது, '15ஆம் தேதி ஆளுநரிடம் 700 பக்க தி.மு.க ஊழல் குறித்த புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதில் தி.மு.க ஆட்சியில் கடந்த ஒரு ஆண்டு காலமாக செய்த ஊழல் பட்டியல் இருக்கும்.

வருகிற ஜூன் 5'ம் தேதி மதுரையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க'வின் அமைச்சர்கள் ஊழல் பட்டியல் வெளியிடுவதில் பா.ஜ.க திட்டவட்டமாக இருக்கிறது, இதனை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக வெளிப்படையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்' என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


Source - News 18 tamil

Similar News