திருடர்கள் என்ற பேச்சுக்கு ஓ.பி.சி சமூகத்திடம் மன்னிப்பு கேளுங்கள் - காங்கிரசுக்கு பா.ஜ.க கோரிக்கை!
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. கருப்பு உடை அணிந்து போராடி வந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது நீதித்துறை மீது நம்பிக்கை வந்துள்ளதை பாராட்டலாம் .
வேறு சில வழக்குகளில் சில மணி நேரத்தில் கோர்ட்டை அணுகிய காங்கிரஸ் கட்சி தனது உயர்ந்த தலைவருக்காக இத்தனை நாட்கள் தாமதம் செய்தது கவலை அளிக்கிறது. அதே சமயத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை திருடர்கள் என்று கூறியதற்காக அவர்களிடமும் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.