அருண் ஜெட்லி காலமானார்! எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!

அருண் ஜெட்லி காலமானார்! எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!

Update: 2019-08-24 07:24 GMT


பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல்நல குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 66.


முன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, உடல்நிலை பாதிக்கப்பட்டு புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல துறை மருத்துவர்கள் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது.


இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார்.


அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் சென்று மருத்துவமனையில் விசாரித்து வந்தனர்.


மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, ஜிதேந்திர சிங், ராம் விலாஸ் பாஸ்வான், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, ஜோதிர்ஆதித்யா சிந்தியா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பலர் வந்து உடல்நலன் குறித்து விசாரித்து சென்றனர்.


கடந்த திங்கட்கிழமை உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உ.பி. கவர்னர் அனந்திபென் படேல், பிகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, டெல்லி ஆளுநர் அனில் பைஜால், மேனகா காந்தி ஆகியோர் நேரில் சென்று ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.


கடந்த 10-ஆம் தேதியில் இருந்து ஜெட்லியின் உடல்நலன் குறித்து எய்ம்ஸ் நிர்வாகம் எந்தவிதமான அறிக்கையும் ஊடகங்களுக்கு அளிக்கவில்லை. இருப்பினும் ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு பிரிவுகள் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர். 


இந்நிலையில், அருண் ஜெட்லியின் உடல்நிலை நேற்று இரவிலிருந்து மிகவும் மோசமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன இந்த  நிலையில்   அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது.


Similar News