அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'அந்தகாரம்' - OTT வெளியீடா?

அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'அந்தகாரம்' - OTT வெளியீடா?

Update: 2020-04-13 04:35 GMT

இயக்குநர் அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இனைந்து தயாரித்திருக்கும் படம் 'அந்தகாரம்'. இதில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைச் சுசி சித்தார்த் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக அமுதன் பணிபுரிந்துள்ளார்.

இப்படத்தினை படத்தின் இயக்குநரான சுசி சித்தார்தே தயாரித்த நிலையில் சில மாதங்களுக்கு முன் பேஷன் ஸ்டுடியோஸ் இப்படத்தினை வாங்கியுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளதால் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பொருட்டு 'அட்லி'யுடன் இனைந்து இப்படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்நேரத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அனேகமாக இப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Similar News