அயோத்தி தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகத்தான் வரவே விரும்புகிறோம்: இல்லை என்றாலும் நிலம் முழுவதையும் அவர்களுக்கே திருப்பிக் கொடுப்போம் !! மொகலாய மன்னர் பாபரின் பேரன் சமரச அறிவிப்பு

அயோத்தி தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகத்தான் வரவே விரும்புகிறோம்: இல்லை என்றாலும் நிலம் முழுவதையும் அவர்களுக்கே திருப்பிக் கொடுப்போம் !! மொகலாய மன்னர் பாபரின் பேரன் சமரச அறிவிப்பு

Update: 2019-11-08 04:36 GMT


பல நூறு ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி ராமர் கோவில் நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளி வரவுள்ளது. உணர்வு பூர்வமான அதே சமயம் பரபரப்பும், பதற்றமும் நிறைந்த இந்த தீர்ப்பை அனைவரும் மூச்சை அடக்கிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முக்கிய நேரத்தில் பாபர் வழி மொகலாயப் பேரரசர்களின் தற்போதைய வாரிசும், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் பேரனான இளவரசர் யாகூப் ஹபீபுதீன் டூசி நடுநிலையான கருத்துக்களை கூறியுள்ளார்.


இளவரசர் யாகூப் ஹபீபுதீன் டூசி குடியரசுத்தலைவருக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில் தனது மூதாதையரான பேரரசர் பாபர் சமய சார்பற்றவர் என்றும் அவரால் அந்த கோவில் இடிக்கப்படவில்லை என்றும், ஆனால் அவரது தளபதியான மீர் பகி யால்தான் ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாகவும், அந்த சம்பவத்துக்காக இப்போது தான் எனது மூதாதையர் சார்பில் இந்து சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறினார்.


அவர் நியூஸ் எக்ஸ் தொலைகாட்சி ஓன்றுக்கு பேட்டி அளிக்கையில் “ தீர்ப்பு ராமர் கோவிலுக்கு ஆதரவாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவ்வாறு நேர்ந்தால் இன்ஷல்லா புகழ் ( அல்லா அல்லது தெய்வத்தின் புகழ் ) இந்து சமூகத்துக்குத்தான் செல்லும் என்றும் கூறினார்.


பாபருக்குப் பிறகு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சொத்துக்களைக் கைப்பற்றியது, கிழக்கிந்திய கம்பெனிக்குப் பிறகு அது இந்திய அரசுக்குச் செல்லும் என்று அவர் கூறினார். ஒரு வேளை தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக வராவிட்டாலும் 100 சதவீதம் நிலத்தை இந்திய அரசிடம் ஒப்படைத்திடுவோம்.


இதை கவுரவமான வகையில் உச்சநீதிமன்றம் சிந்திக்கும் என்று நான் நம்புகிறேன், இந்து சொத்துக்கள் தொடர்பான இந்த தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஏனெனில் இது ராம் மந்திர் விஷயம் மட்டும் அல்ல, ராமர் மீது இந்து மக்கள் கொண்ட விசுவாசத்தின் விஷயம். ஸ்ரீ ராம் இந்து சமூகத்திற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் அதிபதி. தீர்ப்பு என்ன வந்தாலும், அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், ”என்று இளவரசர் டூசி கூறினார்.


அதன் அடிப்படையில் இந்து சமூகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அங்கு ஒரு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று அவர் இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டார். "ஏனெனில் முஸ்லிம்கள் யாரும் இஸ்லாமிய பார்வையின் படி, அங்கு மசூதியை கட்ட முடியாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்க வேண்டும், ”என்றார்.


மேலும், சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையாளர் நீங்கள் தானா, அது எப்படி என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்”  16 ஆம் நூற்றாண்டில் பாபரின் தளபதி மசூதியைக் கட்டியதாக இளவரசர் டூசி கூறினார். முகலாயர்களின் காலத்தில், மிர் பகி கோயிலை அழித்த பின்னர் மசூதியை கட்டியிருக்க வேண்டும், ஏனெனில் தொல்லியல்துறை ஏற்கனவே அதை நிரூபித்துள்ளது.
“இது ஒரு தனியார் சொத்து. தனியார் சொத்து என்பது முஸ்லிம் சமூகத்திற்கான சொத்து அல்ல. அது படையினருக்கு மட்டுமே சொந்தமானது. என்ற போதிலும் பாபரிடமிருந்து வக்ஃப் வாரியத்துக்கான பத்திரம் எதுவும் இல்லை, அதனால்தான் வக்ஃப் வாரியம் நீதிமன்றத்தில் எந்த ஒரு ஆவணங்களையும் வழங்க முடியவில்லை. அவர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது, என்றாலும் வக்ஃப் வாரியம் தொடர்ந்த இந்த வழக்கு ஒரு ஆதாரமற்ற வழக்கு, ”என்றார்.




https://youtu.be/SM_BGb7S3Zk

Similar News