வங்க தேசத்தில் துர்கா பூஜையின்போது கோயில்களை சூறையாடிய முஸ்லீம்கள்!

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது முஸ்லீம்கள் இந்து கோயில்களை சூறையாடி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-10-15 07:31 GMT

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது முஸ்லீம்கள் இந்து கோயில்களை சூறையாடி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நமது அருகாமையில் உள்ள வங்கதேசம் முஸ்லீம் நாடாக உள்ளது. அங்கு இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தற்போது நவராத்திரி விழா தொடங்கியதை அடுத்து அங்கு இந்துக்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். இதனை சீர்குலைக்கும் வகையில் குமில்லா பகுதியில் உள்ள ஒரு கோயிலை முஸ்லீம்கள் சூடையாடியுள்ளனர்.


இதே போன்று சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுவா பகுதிகளில் உள்ள கோயில்களிலும் வன்முறை கும்பல் வெறியாட்டம் நடத்தியுள்ளனர். இதில் சாமி சிலைகள் சேதமடைந்தது. இது மட்டுமின்றி நாட்டில் பல்வேறு இடங்களிலும் துர்கா பூஜையை சீர்குலைக்கும் நோக்கில் முஸ்லீம்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமை மோசமானதால் வங்கதேச அரசு பாதுகாப்பு படையினரை சம்பவ நடந்த பகுதிகளுக்கு அனுப்பி இரு தரப்பினரிடையே சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இந்துக்கள் நவராத்திரி தினத்தில் சாமி கூட நிம்மதியாக கும்பிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News