ஒரு கிராமத்தையே தாய் மதத்திற்கு திரும்ப வைத்த பெண்! ஜார்க்கண்டில் சுவாரசியம்!

பணத்துக்காக மதம் மாறிய இந்துக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் அவ்வாறு பணம் தர இயலாதவர்களுக்கு கல்லறைகளைக் கூட மறுக்கும் சம்பவங்களும் நடக்கத் தான் செய்கிறது.

Update: 2021-08-29 08:36 GMT

ஜார்கண்டில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு கிராமத்தையே மீண்டும் தாய் மதத்திற்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பெண் அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் இந்துக்களிடம் பணம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி அவர்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் அதிகமாக சிக்குவது அப்பாவி பழங்குடியின மக்கள் தான். ஆனால் உண்மையில் மதம் மாறிய பிறகு அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பணத்துக்காக மதம் மாறிய இந்துக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் அவ்வாறு பணம் தர இயலாதவர்களுக்கு கல்லறைகளைக் கூட மறுக்கும் சம்பவங்களும் நடக்கத் தான் செய்கிறது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாரி கிராமத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராமத்தையே கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாற்றி உள்ளனர். இது போன்ற கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக பல ஆண்டு காலமாக போராடி வரும் பிரியா முண்டா என்ற பெண் இவர்களை தாய் மதத்திற்குத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த கிராமத்தில் உள்ள பாதிரியார் ஒருவர் அங்குள்ள மக்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதை தடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாரி கிராமத்தில் உள்ள பழங்குடியினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய பிரியா முண்டா அவர்களிடம் தாய்மதம் திரும்புவதற்கான கட்டாயத்தை எடுத்துரைத்தார். இதனை கேட்ட அந்த கிராமத்தினர் கிறிஸ்தவ மதத்திலிருந்து தாய் மதத்துக்கு திரும்புவதற்கு முடிவெடுத்துள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாத பழங்குடியின மக்களை மதம் மாற்றி அவர்களிடம் மத்திய அரசு பற்றிய பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு ஒட்டுமொத்த கிராமத்தையே கிறிஸ்தவ மிஷனரிகள் மத மாற்றம் செய்துள்ளனர்.

இவ்வாறு மதம் மாறிய பழங்குடியினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் தாய் மதத்திற்கு திரும்புவதற்கு உதவியாய் இருந்த பிரியா முண்டாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Source : Tamaraitv

Tags:    

Similar News