குடிபோதையில் கார் ஓட்டிச்சென்ற போது கையும்களவுமாக பிடிபட்ட ராகுல் காந்தி !

ராகுல்காந்தி என்பவரை குஜராத் காவல் துறையினர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.

Update: 2021-08-25 09:34 GMT

குஜராத்தில் குடிபோதையில் ஆடி காரை ஓட்டிச்சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய ராகுல்காந்தி என்பவரை குஜராத் காவல் துறையினர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் பனாஸ் காமில் வசித்து வருபவர் ராகுல் காந்தி. இவர் குடிபோதையில் தனது ஆடி காரை அதிவேகமாக ஓட்டிச்சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி என்ற அந்த நபர் குடிபோதையில் தனது காரை தாறுமாறாக ஓட்டி சென்றதால் அப்பகுதியில் பயணம் செய்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குடி போதையில் இருந்த ராகுல் காந்தியை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடைய 30 லட்சம் மதிப்புடைய ஆடி காரையும் காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது ராகுல் காந்தி அங்கே காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்த ராகுல்காந்தியை காவல்துறையினர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுதலை செய்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குடி போதையில் இருந்த அந்த நபரின் பெயர் ராகுல்காந்தி என்பதால் நெட்டிசன்கள் இந்த செய்தியை டுவிட்டரில் பகிர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கலாய்த்து வருகின்றனர். காங்கிரஸில் தீவிர தொண்டர்களோ நல்லவேளை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது நம் முன்னாள் தலைவர் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


Source : India Today

Tags:    

Similar News