"ஓங்கி ஒரு அறையை வாங்கிக் கொண்டால் உணவு இலவசம்"- வினோதமான உணவகம்!
ஓங்கி உங்கள் கன்னத்தில் ஒரு அறையை வாங்கிக் கொண்டு இலவசமாக எவ்வளவு உணவை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று ஒரு உணவகம் இயங்கி வருகிறது. ஆனால் நீங்கள் காசு கொடுத்து அறையை வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஓட்டலுக்கு செல்ல விரும்பினால் மனசார வாழ்த்தும் அளவுக்கு சுவையாக இருக்கும் உணவகத்திற்கு சென்று வயிறார சாப்பிட்டு வந்தால் தான் திருப்தி. அதை விட்டுவிட்டு சாப்பிடும் முன்பு கன்னத்தில் இரண்டு அரை வாங்கிவிட்டு சாப்பிட சொன்னால் நீங்கள் சாப்பிடுவீர்களா? அப்படி அரை வாங்குவதற்கு கட்டணமும் விதித்தால் அந்த ஓட்டல் பக்கம் நீங்கள் போவீர்களா யோசிப்பீர்கள் தானே?
ஆனால் ஜப்பானில் இருக்கும் ஒரு ஓட்டல் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுபவர்கள் கையால் அறை கொடுத்து விட்டு உணவு உபசரிப்பு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. வாடிக்கையாளர்களும் விரும்பி வந்து அடி வாங்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். அப்படி அடி வாங்குவதற்கு கட்டணமாக ரூபாய் 170 கொடுக்க வேண்டும். அதிலும் அங்குள்ளவர்களில் உங்களுக்கு விருப்பப்பட்ட பெண் அல்லது ஆண் ஊழியரிடம் அடி வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் 500 சிறப்பு கட்டணமாக செலுத்த வேண்டும்.
அவர்கள் வந்து கன்னத்தில் பளார் பளார் என்ற சில அடிகள் கொடுத்த பின்பு உங்களுக்கு உணவு பரிமாறுவார்கள். ஆனால் உணவுக்கு தனியே கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவது இல்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட விரும்பி வந்து அடிவாங்கி சாப்பிடுகிறார்களாம். நாக்கோயா நகரில் உள்ள ஷாக் சிகோ-கோயா என்ற உணவகத்தில் தான் இந்த 'அன்பான' உபசரிப்பு. இது பற்றிய வீடியோ பாங்கா கலட் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருப்பது வைரலாகி விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
SOURCE :DAILY THANTHI