மத்திய அரசின் உத்யம் சகி திட்டம் - தமிழகப் பெண் தொழில் முனைவோர் 1067 பேர் பதிவு!

மத்திய அரசின் உத்யம் சகி திட்டத்தின் கீழ் தமிழக பெண் தொழில் முனைவோர் சுமார் 1067 பேர் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Update: 2022-12-13 14:10 GMT

மத்திய அரசு பெண் தொழில் முனைவோர்களுக்கும் இந்த சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் முக்கிய உத்யம் சகி என்ற திட்டத்தின் மூலமாக பெண் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தை சேர்ந்த 1067 பெண்கள் பதிவு செய்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.


சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தில் பெண் தொழில் முனைவோர்களை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படும் நிதி திட்டங்களில் கொள்கை என்று இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் வரை உத்யம் சகி இணையதளத்தில் பதிவு செய்த தமிழ்நாட்டை சேர்ந்த பெண் தொழில் முனைவோர்களின் மாவட்ட வாரியாக விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.


இதில் பல்வேறு தமிழகத் தொழில் முனைவோர்கள் தன்னை அடையாளப்படுத்த இருக்கிறார்கள் குறிப்பாக ராணிப்பேட்டையில் 334 பெண்கள், சேலத்தில் ஆறு 163 பெண்கள், திருவண்ணாமலை 210 பெண்கள், வேலூரில் 360 பெண்கள் என மொத்தம் 1067 பெண் தொழில் முனைவோர்கள் அக்டோபர் 22ம் தேதி வரை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல்களை மாநிலங்களவையில் மத்திய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் இணைய அமைச்சர் பானு பிரசாந்த் அவர்கள் எழுத்துப்பூர்வமாக நேற்று தகவல் தெரிவித்தார்.

Input & Image courtesy: The Hindu News

Tags:    

Similar News