மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் செய்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்!
மூன்றாம் பிறை சந்திரன் தரிசனத்தின் மூலம் குடும்ப ஒற்றுமை அதிகரிக்க இயலும்.
அமாவாசைக்கு அடுத்த வரும் மூன்றாம் நாளில் சந்திர பிறை தரிசனம் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களைக் விளக்கி, குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். எனவே அமாவாசைக்கு அடுத்து வரும் நாட்களில் எங்கள் வீட்டில் விளக்கு ஏற்றுவதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள கவலைகள், கஷ்டங்கள் அனைத்தும் மறைந்துவிடும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தத்தில் நீங்கள் வழிபடுவதன் மூலம் சிறந்த பலனையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். மேலும் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் புராணங்கள் பல்வேறு வரலாறுகளை கூறுகின்றது.
ஒரு முறை தட்சன் அவர்களுடைய சாபத்தால் சந்திரன் தன்னுடைய பல்வேறு கலைகளையும் இழந்து காணப்பட்டார். இதன் காரணமாக சாப விமோசனம் வேண்டி அவர் தவமாய் தவம் இருக்கிறார். இதனை பார்த்த 27 சந்திர மனைவியாரும் சிவனிடம் வேண்டி சாபவமோசனம் வழங்குமாறு மனமுருகப் பிரார்த்திக்கிறார்கள். பிறகு சிவபெருமான் சாபவிமோசனம் வழங்கி தன்னுடைய தலையில் மூன்றம் பிறை சந்திரனை முடிசூட்டிக் கொள்கிறார். எனவே மூன்றாம் பிறையை நீங்கள் சந்திர தரிசனம் செய்வது உங்களுடைய மன கவலைகள் மற்றும் மன பிணிகள் போன்றவற்றை மற்றும் உங்களுடைய கண் பார்வைத் திறனை மேம்படுத்தும்.
செவ்வாய், புதன் மற்றும் சனி ஆகிய நாட்களில் வரும் சந்திர தரிசனம் விசேஷமானது. எனவே இத்தகைய நாட்களில் வீடுகளில் விளக்கு ஏற்றி சந்திர தரிசனம் செய்வது உங்களுடைய குடும்பத்தில் பலனை அதிகரிக்கும். மேலும் சிவன் பார்வதி விநாயகர் போன்ற கடவுள்களின் உருவங்கள் பிறை வடிவச்சந்திரன் இடம் பெறுவது வழக்கம். இது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. எனவே அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்திற்கு அவ்வளவு மகிமை உண்டாக்கும்.
Input & Image courtesy: Twitter Post