சென்னை குப்பை வண்டியில் கிறிஸ்தவ மிஷனரிகளின் லோகோ ! - வைரலாகும் புகைப்படம்!

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் உயர் பொறுப்புகளில் அதிகரித்து வருவதாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி குப்பை வண்டிகளில் சிலுவை வரையப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Update: 2021-08-08 12:35 GMT

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தை கிறிஸ்தவ மயமாக்க முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் குப்பை வண்டிகளில் கிறிஸ்தவ மிஷினரிகளின் சிலுவை வரையப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இவற்றில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பைகள்,  வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது. தற்போது வரை சென்னை மாநகராட்சி லோகோ மட்டுமே குப்பை வண்டிகளில் வரையப்பட்டிருந்த நிலையில் தற்போது கிறிஸ்தவ மிஷினரிகளின் சிலுவை வரையப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் உயர் பொறுப்புகளில் அதிகரித்து வருவதாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி குப்பை வண்டிகளில் சிலுவை வரையப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை என்று கிறிஸ்தவர்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது சென்னை குப்பை வண்டியில் லோகோ மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இதுகுறித்து சமூக வலைதளங்களில் சென்னை வீதிகளில் வழக்கமாக குப்பை சேகரிக்கும் குப்பை வண்டியில் லோகோ மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்றும், திமுக கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுகிறதா என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Source : Twitter

Tags:    

Similar News