மோடி அரசின் கீழ் சீனாவால் ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை- உள்துறை அமைச்சர் அமித்ஷா !
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கீழ் சீனாவால் இந்தியாவின் ஒரு அங்குல இடத்தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்று உள்துறை அமைச்சர் பெருமையாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்று மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.உங்கள் எம்.பி யார்? எந்த கட்சி ஆட்சி அமைக்கும்? அடுத்த பிரதமர் யார்? என்பதை நீங்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன.
ஒரு பக்கம் ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணியும் மறுபக்கம் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவும் உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை. இந்தியாவின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநில வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசு என்ன செய்துள்ளது ?
2004 முதல் 2014 வரை அசாமுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி மட்டுமே. அதே சமயம் 2014 முதல் தற்போது வரை ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 4,15,000 கோடி. இதுதான் பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் சாதனையாகும். வரும் ஆண்டுகளில் அசாம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
SOURCE :Dinamani