அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி : வரும் புதன்கிழமை காலை முதல் செங்கல் எடுத்து வைத்து தொடங்குவதாக அறிவிப்பு.!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி : வரும் புதன்கிழமை காலை முதல் செங்கல் எடுத்து வைத்து தொடங்குவதாக அறிவிப்பு.!

Update: 2020-06-09 02:10 GMT

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணி முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு முதல் செங்கல் எடு்த்து வைக்கப்பட்டு வரும் 10 ந்தேதி புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கப்படுகிறது.

பூஜையை மகந்த் கமல் நாயன் தாஸ் உள்ளிட்ட மற்ற சாதுக்கள் ஆகியோர் செய்கின்றனர். இந்தப் பூஜை 2 மணிநேரம் நடக்கும். இந்த நிகழ்ச்சிக்கு மிகச் சிலரே அழைக்கப்பட்டுள்ளனர்

குபேர திலக கோயிலில் உள்ள சிவனுக்கு பூஜை நடத்தப்பட்டு ருத்ரா அபிஷேகம் நிகழ்ச்சி முடிந்தபின் இந்தப் பணி தொடங்கப்படுகிறது.

இந்த ருத்ரா அபிஷேக நிகழ்ச்சியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் நபர்கள் பங்கேற்க உள்ளதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்யி கோபால் தாஸின் செய்தித்தொடர்பாளர் மகந்த் கமல் நயன் தாஸ் நிருபர்களிடம் இன்று கூறினார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் கடந்த இருமாதங்களாக நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் மீண்டும் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News