சிக்கலில் சீனியர்கள்... தி.மு.க-வின் மதர்போர்டில் கை வைத்த பி.கே டீம் : ஓரங்கட்ட ரெடியான நீண்ட லிஸ்ட்!

சிக்கலில் சீனியர்கள்... தி.மு.க-வின் மதர்போர்டில் கை வைத்த பி.கே டீம் : ஓரங்கட்ட ரெடியான நீண்ட லிஸ்ட்!

Update: 2020-07-15 04:02 GMT

அடுத்த ஆண்டு, மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு குறித்து, பிரசாந்த் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதில் திமுக 200  தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது. மீதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம். இதில் காங்கிரஸ் கழண்டு ஓடினாலும் பிரச்சனை இல்லை என்கிறது கிஷோர் டீம்.

ஆட்சியை பிடிக்க, தி.மு.க., வகுத்துள்ள வியூகத்தில், குறைந்தபட்சம், 45 வயதுக்கு உட்பட்ட வேட்பாளர்களை தான் களத்தில் நிறுத்த வேண்டும் என்றும், கிஷோர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படியே, அவரது பட்டியல் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.

எவ்வளவு சீனியராக இருந்தாலும் தேர்தல் செலவுக்கு, கட்சி தரும் பணத்தை நம்பி இருப்பவர்கள், தொண்டர்கள், ஜாதி பலம் இல்லாதவர்களுக்கு இந்த முறை சீட் கிடையாதாம்.

ஜாதி, பண பலம், தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே, மூத்த நிர்வாகிகள் சிலர், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெறுவர்.

மூத்த நிர்வாகிகளுக்கு, போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது என்றும், அவர்களுக்கு கட்சியில் ஏதாவது பதவி தந்து, ஓரங்கட்டி விட வேண்டும் என்று ஸ்டாலினுக்கு புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. 

Similar News