சீனாவில் தேவாலயங்களில் அகற்றப்படும் சிலுவை - இயேசு படத்தை நீக்கி கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவு!

சீனாவில் தேவாலயங்களில் அகற்றப்படும் சிலுவை - இயேசு படத்தை நீக்கி கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவு!

Update: 2020-07-23 02:49 GMT

மத சிறுபான்மையினரின் அடக்குமுறையைத் தொடர்ந்து, சீன அதிகாரிகள் இப்போது கிறிஸ்தவர்களுக்கு சிலுவைகளை அடித்து நொறுக்கி, இயேசுவின் உருவங்களை தங்கள் வீடுகளில் இருந்து அகற்றி, அதற்கு பதிலாக கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்குமாறு கட்டளையிட்டுள்ளனர்.

சீனாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த நிலையில், சில இடங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் உள்ள இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் படங்களை வைக்கச் சொல்லி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அன்ஹுய், ஜியாங்சு, ஹெபே மற்றும் ஜெஜியாங் உள்ளிட்ட பல மாகாணங்களில் உள்ள தேவாலயங்களில், அரசு அதிகாரிகள் மத அடையாளங்களை அண்மையில் அழித்துவிட்டதாக அமெரிக்கா செய்தி தளமான ரேடியோ ஃப்ரீ ஆசியா தெரிவித்துள்ளது.

'டெய்லி மெயில்' தளத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், அன்ஹுய் ஜியான்ங்சு, ஹேபேய் மற்றும் ஸீஜியாங் ஆகிய மாகாணங்களில் அதிகாரிகள், தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மாகாணமான ஷாங்ஹியில், இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜின்ஜியாங்கில் மத சிறுபான்மையினருக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களுக்கு சீனா ஏற்கனவே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

ஆதாரம்: https://www.dailymail.co.uk/news/article-8544835/China-orders-Christians-destroy-crosses-churches-images-Jesus.html

Similar News