கொரோனவிற்கான தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்த உடன் உலக நாடுகளுக்கு கொடுக்கப்படும் - அதிபர் டிரம்ப்.!

கொரோனவிற்கான தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்த உடன் உலக நாடுகளுக்கு கொடுக்கப்படும் - அதிபர் டிரம்ப்.!

Update: 2020-07-29 06:37 GMT

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்த உடன் அனைத்து உலக நாடுகளுக்கும் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்காவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் அமெரிக்காவில் இதுவரை 44 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் கொரோனா வைரஸை அளிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்து வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் கூறியது: கொரோனவிற்கான தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றது. பல நாடுகளுக்கு வென்டிலேட்டர்கள் கொடுத்ததைப் போல தடுப்பூசி மருந்தும் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் இல்லை என்றால் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியாகி விடும் என அதிபதி டிரம்ப் நிர்வாகம் கணித்துள்ளனர்.  

Similar News