டெல்லியில் கொரோனவால் இறந்த முஸ்லிம் பெண் உடல் அடக்கத்தின்போது அதிர்ச்சி.. முகத்தை பார்த்தபோது அது ஒரு ஹிந்து பெண் உடல்.!

டெல்லியில் கொரோனவால் இறந்த முஸ்லிம் பெண் உடல் அடக்கத்தின்போது அதிர்ச்சி.. முகத்தை பார்த்தபோது அது ஒரு ஹிந்து பெண் உடல்.!

Update: 2020-07-09 02:12 GMT

டெல்லியில் நேற்று முன்தினம் சோகமான ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றது. ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முஸ்லிம் பெண் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய உடலை அமரர் அறையில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அனுப்பியது.

அவர்களும் முஸ்லிம் அடக்க ஸ்தலத்துக்கு ஏற்பாடுகள் செய்ய சொல்லிவிட்டு உடலைப் பெற மருத்துவமனை சென்றனர். உடலும் அடக்க இடத்துக்கு வந்தது, உடலை குழிக்குள் இறக்கும் சமயத்தில் இறந்து போன பெண்ணின் குழந்தை தன் தாயின் முகத்தை ஒரு முறையாவது பார்த்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தது. உறவினர்கள் அங்கு வந்திருந்த மருத்துவமனை பணியாளர்களிடம் கெஞ்சினர், அவர்கள் பிளாஸ்டிக் உறையை திறந்து முகத்தை காட்ட ரூ. 500 இலஞ்சம் கேட்டனர். உறவினர்களும் கொடுத்தனர்.

உறையைத் திறந்ததும் பெண்ணின் முகத்தை பார்த்த அனைவருக்கும் பிரம்மாண்டமான அதிர்ச்சி. முகத்தில் குங்குமப் பொட்டும், காது மூக்கில் இந்துப் பெண்களுக்கு உரிய அணிகலன்களும், கழுத்தில் தாலி இருந்ததையும் பார்த்த அவர்களுக்கு பிணவரையில் பிணம் மாறிப்போனது தெரிய வந்தது. இதனால் முஸ்லிம் அடக்க ஸ்தலத்துக்கு வந்த இந்துப்பெண்ணின் உடல் மீண்டும் பிணவறைக்கு திரும்பியது . அவர்கள் தங்களுக்குரிய உடலை பெற்றுச் சென்றனர். இதனால் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் , முஸ்லிம் குடும்பத்தினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. சரியாக கவனிக்காமல் பிணத்தை மாற்றி அளித்த அலுவலர் கடைசியில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று டெல்லியையே பரபரப்புக்கு உள்ளாக்கியது.     

https://swarajyamag.com/insta/hindu-reaches-burial-ground-muslim-cremated-as-aiims-mixes-up-covid-19-patients-bodies

Similar News