புதுச்சேரி : கொரோனா - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பலி.!

புதுச்சேரி : கொரோனா - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பலி.!

Update: 2020-07-28 11:11 GMT

புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பாலன், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸின் பொதுச் செலாளராக இருந்தவர்(68). காங்கிரஸ் கட்சியில் இருந்து 2011-ல் வெளியேறிய அவர் முன்னாள் முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த பாலன் ரங்கசாமியுடன் வெளியேறினார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கும்போதும் ரங்கசாமியுடன் இருந்தவர்களில் இவரும் ஒருவர். அதன்பிறகு அக்கட்சியின் நியமன எம்.எல்.ஏ-வாகவும் ஏ.எஃப்.டி பஞ்சாலை வாரியத்தில் தலைவராகவும் பணியாற்றினார்.

68 வயதான இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அதன் காரணமாகக் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த 23-ம் தேதி புதுச்சேரி அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இரத்த அழுத்த நோய், சக்கரை நோய் பாலனுக்கு இருந்ததன் காரணமாக நேற்று அவரது உடல்நிலை மோசமானது இதனையடுத்து இன்று அதிகாலை பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பாலான் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏ.எப்.டி பஞ்சாலையின் வாரியத் தலைவர் பதவி வகித்தார். கொரோனாவால் பாலன் உயிரிழந்த சம்பவம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News