விஷால் மேனேஜர் கார் உடைக்கப்பட்டது ஏன்? இதுதான் காரணம்.!

விஷால் மேனேஜர் கார் உடைக்கப்பட்டது ஏன்? இதுதான் காரணம்.!

Update: 2020-07-07 14:41 GMT

விஷாலின் கார் மர்ம நபர்களால் இரவோடு இரவாக தாக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆக்சன் ஹீரோக்களில் ஒருவரான விஷால் நடிகர் மட்டுமில்லாமல்

பிலிம் பேக்டரி மூலம் படங்களை தயாரித்தும் உள்ளார். இவருடைய அலுவகத்தில் ஹரி

கிருஷ்ணன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் பகுதியில் உள்ளது. நேற்றிரவு காரை நிறுத்திவிட்டு சென்ற இவர் காலையில் இவர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் கடந்த வாரம், விஷாலின் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிய பெண் ரம்யா என்பவர் 40 லட்சம் வரை மோசடி செய்ததாக ஹரி கிருஷ்ணன் விருகப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே இவரால் ஏற்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Similar News