ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காத உணவகங்கள், அழகு நிலையங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காத உணவகங்கள், அழகு நிலையங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

Update: 2020-07-10 09:45 GMT

ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காத உணவகங்கள், அழகு நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

அனைத்து உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவரும் ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

உணவகங்கள், அழகு நிலையங்கள் முகப்பு வாயிலில் கண்டிப்பாக கைகளை கழுவுவதற்கு ஏதுவாக கிருமி நாசினி (Sanitizer) வைக்கப்பட்டிருக்க வேண்டும். வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் அதிகப்பட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

கடைகளில் குளிர்சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக்கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் உணவகங்கள், அழகு நிலையங்களிடம் அதற்கான அபாரதத்தொகை வசூலிக்கப்படும்.எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அனைத்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Similar News