"அல்லா அருகில் இருக்கும் போது வைரஸ் நம்மை எப்படி தொட முடியும்?", "கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்.. அது முஸ்லிம்களை பிரிக்கும் அரசின் சதி!" டெல்லி தப்ளிகி மாநாட்டில் மவுலானா நிஜாமுதீன் வீடியோ பேச்சுக்கள் அம்பலம்!

"அல்லா அருகில் இருக்கும் போது வைரஸ் நம்மை எப்படி தொட முடியும்?", "கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்.. அது முஸ்லிம்களை பிரிக்கும் அரசின் சதி!" டெல்லி தப்ளிகி மாநாட்டில் மவுலானா நிஜாமுதீன் வீடியோ பேச்சுக்கள் அம்பலம்!

Update: 2020-04-01 04:48 GMT

டெல்லியில் எச்சரிக்கைகளை மீறி இஸ்லாமிய தப்ளிகி ஜமாத் நிகழ்ச்சி நடத்தி அகில இந்திய அளவில் ஆயிரக்கணக்கானவர்களை பங்கேற்க செய்தவர் மார்காஸ் மவுலானா என்கிற அமைப்பின் போதனையாளரும், நிர்வாகியுமான நிஜாமுதீன். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மட்டும் 1,500 பேர் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது தான் நூற்றுக்ககணக்கனவர்களுக்கு கொரோனா தொற்று ஒரே சமயத்தில் ஏற்பட்டு இன்று இந்தியாவையே குலுங்க வைத்துள்ளது.

இந்த நிஜாமுதீன் மீதுதான் இப்போது கெஜ்ரிவால் அரசு தொற்றுநோய் நோய்கள் சட்டத்தின்(1897) பிரிவு 3 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. டெல்லி அரசு விதித்த தடையை மீறி இவ்வாறு செய்ததால் இந்த வழக்கு போடப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் கூறினார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற மசூதிக்குள் மார்ச் 22-ஆம் தேதி வரை சுமார் 2500 பேர் மஸ்ஜித்தில் தங்க வைக்கப்பட்டனர், அவர்களில் 1,500 பேர் 23-ஆம் தேதி வெளியேறிய பின்னர், ஆயிரம் பேர் இன்னும் உள்ளே நுழைந்தனர். இந்த நிகழ்வின் போதுதான் நூற்றுக்கணக்கான கொரோனா நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இவர்களில் 163 பேருக்கு உடல்நிலை மிக மோசமாகி டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான் அத்தனை சம்பவங்களும் வெளியில் தெரிய ஆரம்பித்தன.

வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நிஜாமுதீன் தான் ஒன்றும் அறியாத ஒரு குழந்தை போல பேசியுள்ளார். எல்லாவற்றுக்கும் காரணம் பிரதமர் மோடி அறிவித்த அந்த ஒரு நாள் ஊரடங்குதான்( மார்ச் 22-ஆம் தேதி) காரணம் என்பது போல அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த மாநாட்டின்போது கூடியிருந்த கூட்டத்தின் போது அவர் பேசிய பேச்சுக்கள் இப்போது வீடியோவாக வெளி வந்துள்ளது. அதில் நிஜாமுதீன் கொரோனா வைரஸ் பற்றி கீழ் கண்டவாறு பேசியுள்ளார்.

அவர் தனது பேச்சை தொடங்கும் போதே "ஒரு மனிதன் மரணத்தை விட்டு ஓட முடியாது, ஒருவன் ஓடத்தொடங்கும் முன்பே மரணம் அவன் முன்னால் இருக்கிறது, பின்னால் அல்ல என்று அல்லா கட்டளை இட்டுள்ளார்" என்று கூறினார்.

மேலும் பிரசங்கத்தின் போது ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் நோய்வாய்ப் பட்டிருந்தால் தேவதூதர்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறிய அவர் எழுபதாயிரம் ஃபரிஷ்டே (தேவதூதர்கள்) அவர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் எந்தவொரு மருத்துவரும் ஒருவரை இந்த நோயில் இருந்து காப்பாற்ற முடியாது எனக் கூறினார்.

மேலும் இது பீதியைப் பரப்புவதற்கான நேரம் அல்ல, இப்போது இந்திய அரசாங்கம் சமூக விலகலுக்கான அழைப்பை விடுவித்துள்ளது. ஆனால் இத்தகைய நெருக்கடியான காலங்களில், முஸ்லிம்கள் அதற்கு பதிலாக அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று அவர் மீண்டும், மீண்டும் கூறுகிறார்.

மேலும் அவர் பேசுகையில் "மசூதிகள் ஏன் மூடப்பட வேண்டும்? அல்லா அருகில் இருக்கும் போது வைரஸ் நம்மை எப்படி தொட முடியும்? அல்லா மட்டுமே நம்மை காப்பவர், மருத்துவர்கள் அல்ல, நெருக்கடியான இந்த நேரத்தில் அல்லாஹ் மட்டுமே நம்மை பாதுகாக்கிறான் என்று நீங்கள் ஏன் நம்பவில்லை" என்று முஸ்லிம்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

மேலும் சுகாதார வல்லுநர்கள் அளித்த பரிந்துரைகளை இஸ்லாத்திற்கு எதிரான சதி என்று மவுலானா நிஜாமுதீன் கூறினார். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் அரசாங்கம் செய்த சதித்திட்டமாகும் என்று கூறிய அவர் முஸ்லிம்கள் ஒரே தட்டில் சாப்பிடக் கூடாது, அவர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் அமரக் கூடாது என்று அரசாங்கம் கூறுவது இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய சதியாகும் என்றார்.

கொரோனா வரும், போகும் ஆனால் இஸ்லாம் மீதான நம்பிக்கை நமக்கு எப்போதும் நிலையாக இருக்க வேண்டும், முஸ்லிம்கள் ஒன்றாக இருக்க கூடாது அவர்கள் நமாஸ் செய்யக் கூடாது என்று அரசாங்கம் கூறுவது முஸ்லிம்களை பிரிக்கும் சதி என கூறிய அவர் வைரசை நம்பாதீர்கள், நமாஸ் பாராயணத்தை ஒருபோதும் நிறுத்தாதீர்கள் என்று உணர்ச்சி மிகுதியாக அவர் பேசிக் கொண்டிருந்த போதே அங்குள்ள ஏராளமான முஸ்லிம்கள் இருமும் தும்மல் சப்தம் வீடியோவில் கேட்கிறது.

மவுலானாவின் இந்த உரையைப் பார்க்கும்போது, டெல்லியில் உள்ள இந்த மசூதி வுஹனில் இருந்து வந்த கொரோனா வைரஸின் முக்கிய இடமாக மாறியதில் ஆச்சரியமில்லை. இஸ்லாமிய மிஷனரி அமைப்பான தப்லிகி ஜமாஅத்தின் உலகளாவிய மையமான இந்த மஸ்ஜித்தில் நடந்த நிகழ்வில்தான் ஏராளமான நோய்த் தொற்றுகள் உருவாகியுள்ளன. உண்மையில் இந்த இடம் பயங்கரவாத இயக்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பான பயணத்துக்கு உதவும் இடமாகும். வுஹான் கொரோனா வைரஸை இப்பகுதியில் உள்ள பல நாடுகளிலும் பரப்புவதற்கு தப்லிகி ஜமாஅத்துக்கு உண்மையில் பொறுப்புண்டு, இது பின்வரும் விசாரணைகளில் தெரிய வரும்.

மேற்கண்ட மவுலானாவின் பேச்சு அந்த மாநாடு நிகழ்ச்சிகள் குறித்து அவர்களால் பதிவேற்றப்பட்ட முழு உரையின் வீடியோ ஸ்கிரீன் ஷாட் ஆகும், இது யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றப்பட்டப்பட்டுள்ளது. 

Article Credits - OpIndia

Similar News