கொரோனா நிவாரண நிதி ரூ.1000 90 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது: அலுவலர்கள் சிறப்பான ஒத்துழைப்பு!

கொரோனா நிவாரண நிதி ரூ.1000 90 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது: அலுவலர்கள் சிறப்பான ஒத்துழைப்பு!

Update: 2020-04-06 13:30 GMT

கொரோனா நிவாரண நிதி ரூ.1000 இன்று மாலை வரை 90 சதவீதம் பேருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 10 சதவீதம் பேர் வெளியூர் சென்றிருக்கிறார்கள். அதனால் அவர்கள் வந்த பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரண நிதி வழங்கும் பணியில் ஊழியர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். எந்த புகாருக்கும் இடம் கொடுக்காமல் வினியோகிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் வினியோகிக்கப்படும். பொது மக்கள் எப்போதும் போல சென்று பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் பதட்டம் அடையாமல் போதிய சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என சிவில் சப்ளை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.


Similar News