நல்ல செய்தி, கொரோனா தாக்கம் அதிகரிக்காது ? வல்லுநர் சரஸ்வத் கூறியது என்ன?

நல்ல செய்தி, கொரோனா தாக்கம் அதிகரிக்காது ? வல்லுநர் சரஸ்வத் கூறியது என்ன?

Update: 2020-04-14 11:29 GMT

இந்திய அரசு கொரோனாவை கட்டுபடுத்தும் பணியை தீவிர படுத்தி வருகிறது. இதனால் இனி வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் குறையும் என சற்று ஆறுதலாக கூறுகிறார் பாதுகாப்பு துறை அறிவியல் வல்லுநர் வி.கே.சரஸ்வத்.

இந்தியாவில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது நோய் அறிகுறியுடன் மறைந்து இருந்தவர்கள் தற்போது வெளியே வருகின்றனர்

கொரோனா நோய் தடுப்புக்கு இந்தியா கடுமையாக போராடி எதிர்கொண்டு வருகிறது மற்றநாடுகளுடன் ஒப்பிடுகையில் நோயின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது.

கொரோனா நோய் தாக்கம் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 நபர்களாக அதிகரித்து வரும் சூழல் மாறும் என்றும் நோய் தாக்கம் இனி அதிகரிக்காது மத்திய அரசின் ஊரடங்கு நல்ல பலனை தருகிறது

டெங்கு, சிக்கன்குனியா போன்ற வைரஸ் தாக்குதல்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் சூழலில் வைரஸ் நோய்களுக்கு எதிராக முன்கூட்டியே மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என பெங்களூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

Similar News