ஒரே நாளில் 5 கோடிக்கும் மேல் உண்டியலில் ஏழுமலையானுக்கு காணிக்கை - திருப்பதியில் குவியும் பக்தர் கூட்டம்

திருப்பதியின் ஒரு நாள் உண்டியல் காணிக்கை 5 கோடியே 14 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-08-28 12:42 GMT

திருப்பதியின் ஒரு நாள் உண்டியல் காணிக்கை 5 கோடியே 14 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது திருப்பதியில் கூட்டம் கட்டுக்கடங்காகாமல் இருந்து வருகிறது ஏழுமலையானை தரிசிக்க சனி ஞாயிறு என இரண்டு தினங்கள் விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதே நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை உள்ளது. இந்த வருடத்தில் ஆன உண்டியல் காணிக்கை வசூலில் இது அதிகபட்ச தொகை இதுவாகும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது மேலும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

Similar News