களத்தில் இறங்கி கலக்கும் தர்மபுரி தி.மு.க எம்.பி Dr.செந்தில் குமார்! மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்ப்பதில் பாடம் கற்பார்களா மற்ற எம்.பி-க்கள்!

களத்தில் இறங்கி கலக்கும் தர்மபுரி தி.மு.க எம்.பி Dr.செந்தில் குமார்! மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்ப்பதில் பாடம் கற்பார்களா மற்ற எம்.பி-க்கள்!

Update: 2019-06-14 06:18 GMT

தர்மபுரியில் 2019 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட Dr.செந்தில் குமார் வெற்றி பெற்றார். முதன்முறை எம்.பி-யான இவர், சமூக ஊடகங்களின் மூலமும், வேறு வகையிலும் தொகுதி சார்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். சில விஷயங்களில் நேராகவே களத்தில் குதித்தும் குறைகளை நிவர்த்தி செய்கிறார் என்பது தமிழக அரசியலுக்கு சற்று புதிதாகவே இருக்கிறது.


தர்மபுரியில் வெங்கட்டம்பட்டி அருகே மினி டேங் பழுது ஆகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது என்ற புகார் செல்லவே, உடனே அந்த குறையை நிவர்த்தி செய்ய ஏற்பாடுகளையும் செய்து அதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/DrSenthil_MDRD/status/1139042943052832769


அதே போல, "தர்மபுரி மாரண்டஹள்ளி அரசு மகளிர் பள்ளி 1300 மாணவிகள் மற்றும் ஆசிரியர்க்கு தண்ணீர் தட்டுபாடு, JE இளையராஜா EB இடம் முறையிடதில் உடனடியாக 4 பேர் அனுப்பி டிரான்ஸ்பார்மர் சரி செய்து., இப்பொழுது பள்ளிக்கு தடை இன்றி தண்ணீர் கிடைகிறது" என்ற ட்வீட்டையும் வெளியிட்டு மக்கள் மற்றும் இளைஞர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.




https://twitter.com/DrSenthil_MDRD/status/1139358540630355969


அது மட்டுமின்றி, தர்மபுரி சார்ந்த இளைஞர்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி, தொகுதி மேம்பாட்டிற்காக முழு வீச்சில் பணியாற்றி வருகிறார். #CoffeeWithTwitterFriends என்ற சந்திப்பின் மூலம் ட்விட்டரில் இயங்கும் இளைஞர்களை சமீபத்தில் சந்தித்து அந்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




https://twitter.com/DrSenthil_MDRD/status/1137898580906110977


இவை மட்டுமின்றி, ட்விட்டரில் ஜனரஞ்சகமாக அனைவரிடமும் கலந்துரையாடி அரசியல்வாதி என்றால் மக்கள் தொடர்பில்லாமல் இருப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்து வருகிறார். இதுபோன்று செயல்படும் அரசியல்வாதிகள் மக்கள் பேராதரவை பெறுவர் என்பதே நிதர்சனம். முதன்முறை எம்.பி இவ்வாறு செயல்படும் பட்சத்தில் மற்ற எம்.பி-க்கள், மூத்த எம்.பி-க்களும் இவ்வாறு செயல்படுவார்களா என்ற ஏக்கம் சமூக வலைதள பயன்பாட்டர்களிடன் எழாமல் இல்லை.


Similar News